Page Loader
சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42

சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்

எழுதியவர் Saranya Shankar
Dec 25, 2022
12:20 am

செய்தி முன்னோட்டம்

'சூர்யா 42' படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படபிடிப்பு சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது. ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. இது சிறுத்தை சிவாவும் சூர்யாவும் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி,கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கின்றன. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ்வுடன் இணைந்து ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். வரலாற்று நிகழ்வுகளை பின்னணியாக கொண்டு நிகழ்க்காலத்தை பிரதிபலிக்கும் படமாக இது உருவாக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இணையும் பிரபலங்கள்

சூர்யா 42-வில் புதியதாக இணையும் பிரபலங்கள்

3D தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படம் பத்து மொழிகளில் உருவாகி வருகிறது என தகவல் வெளியாகி உள்ளன. இப்படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக இப்படத்தின் கதாநாயகி திஷா பதானி ஒரு மாதக் காலம் சென்னையில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இப்படக் குழுவுடன் சமீபத்தில் இணைந்து உள்ளார். இவர் ஐயப்பனும் கோஷியும் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் பிகில் மற்றும் டாக்டர் போன்ற படங்களில் நடித்த கராத்தே கார்த்தி இணைந்துள்ளார்.