அடுத்த செய்திக் கட்டுரை

பிரபல மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்
எழுதியவர்
Venkatalakshmi V
Mar 21, 2023
06:26 pm
செய்தி முன்னோட்டம்
சன் டிவி, விஜய் டிவி போன்ற தனியார் தொலைக்காட்சிகளில், மிமிக்ரி ஷோக்களில் தோன்றி பிரபலமானவர் கோவை குணா.
சன் டிவியின் அசத்தப்போவது யாரு, மற்றும் விஜய் டிவியில் பிரபலமான கலக்க போவது யாரு போன்ற காமெடி மற்றும், மிமிக்ரி ஷோக்களில் தோன்றி பிரபலமானவர் கோவை குணா.
இவர் ரோபோ ஷங்கர், மதுரை முத்து போன்றவர்களுடன் இணைத்து பல காமெடி நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார்.
சமீப காலமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சை பலன் இன்றி, இன்று,(மார்ச் 21 ) அவர் மரணமடைந்தார்.
இவரின் இந்த மறைவிற்கு அவருடன் மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்களும், அவரின் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
கோவை குணா மரணம்
RIP Kovai Guna 💔😢#KovaiGuna 💔 pic.twitter.com/BENrxhoK98
— Ashwin (@Mr_Ashwin_SK) March 21, 2023
செய்தி இத்துடன் முடிவடைந்தது