Loading...
நிஜத்தில் நஸ்ரியா தான் ரங்கா, நான் அவரோட அம்பான்: ஆவேசம் கெட்டப் ரகசியம் உடைத்த பஹத் பாசில்
ஆவேசம் கெட்டப் ரகசியம் உடைத்த பஹத் பாசில்

நிஜத்தில் நஸ்ரியா தான் ரங்கா, நான் அவரோட அம்பான்: ஆவேசம் கெட்டப் ரகசியம் உடைத்த பஹத் பாசில்

எழுதியவர் Vasuki
Oct 04, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

ஆவேசம் படத்தில் ரங்கா கதாபாத்திரத்தின் தோற்றப் பரிசோதனைக்குத் தனது மனைவி நஸ்ரியாவின் நகைகளையே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்ட நடிகர் பஹத் பாசில், நிஜ வாழ்க்கையில் நஸ்ரியாவே தாதா ரங்கா என்று பகத்பாசில் பதிவிட்டுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகித் தென்னிந்தியா முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மலையாளத் திரைப்படம் ஆவேசம். இப்படத்தில் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளுடன் ரங்கா என்ற தாதா கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். அவருடன் நிழல் போலப் பயணித்து, அவருக்காக எதையும் செய்யத் துணியும் வலதுகையான அம்பான் கதாபாத்திரத்தில் நடிகர் சஜின் கோபு நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்.

டெஸ்ட் லுக் ரகசியம்

நிஜத்தில் நஸ்ரியா தான் ரங்கா

தனது மனைவி நஸ்ரியா நசீமுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள பஹத் பாசில், அந்தப் படத்தின் கெட்டப் உருவான விதம் குறித்து பதிவிட்டுள்ளார்.

ஆவேசம் படத்திற்கான தோற்றப் பரிசோதனையின் போது தான் அணிந்திருந்த நகைகள், மோதிரங்கள் அனைத்தும் நஸ்ரியாவுடையது தான் என்று தெரிவித்துள்ளார்.

தனது நகைகளை அணிந்திருந்த காரணத்தினாலேயே அந்த ரங்கா கெட்டப் நஸ்ரியாவிற்கு மிகவும் பிடித்துப் போனதாக நினைவு கூர்ந்துள்ளார்.

தொடர்ந்து, தங்களின் நிஜ வாழ்க்கை பந்தம் குறித்து நகைச்சுவையுடன் பேசிய பஹத் பாசில்,திரைப்படத்தில் வேண்டுமானால் நான் ரங்காவாக மாஸ் காட்டியிருக்கலாம்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் நஸ்ரியா தான் என்னுடைய ரங்கா, நான் அவருடைய விசுவாசமான அம்பன் தான் என்று பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT