மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி
'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு. அதேபோல, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எல்லா வேடத்திலும் தனி முத்திரை பதிப்பவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில். இவருக்கு, மலையாள சினிமா மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இவர்கள் இருவரும், மாமன்னன் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில், சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில், யுவன் இசையில் உருவாகும் ஒரு புதிய படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது. மாரீசன் என பெயரிடப்பட்ட இந்த புதிய படத்தை, தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறது.