Page Loader
பிரபல பாப் இசைப்பாடகர் எட் ஷீரன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தார்; வைரலாகும் புகைப்படம்
இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது

பிரபல பாப் இசைப்பாடகர் எட் ஷீரன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தார்; வைரலாகும் புகைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 05, 2025
07:13 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆங்கில பாடகர் எட் ஷீரனை சந்தித்துள்ளனர். அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ஏ.ஆர். அமீன் வெளியிட்டார். இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. மேலும் இசை கலைஞர்களுக்கிடையேயான சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து பலரும் ஊகித்துள்ளனர். எட் ஷீரன் தற்போது தனது Mathematics சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத், புனே, டெல்லி NCR, சென்னை, பெங்களூரு மற்றும் ஷில்லாங் ஆகிய ஆறு நகரங்களில் இசைநிகழ்ச்சிகள் நடத்தவுள்ளார். 2024 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ஷீரனின் 2025 சுற்றுப்பயணம் மேலும் கவனத்தை ஈர்க்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post