சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்தி முன்னோட்டம்
சென்னையை சேர்ந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளின் பேரில் சிக்கியுள்ளார்.
இந்த வழக்கில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர், மனைவி அமீனா பானு, திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மற்றும் 8 நிறுவனங்கள் மீது சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், போதைப் பொருள் கடத்தலில் இருந்து கிடைத்த பணத்தில் அமீரும் நன்மை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் இயக்குனர் அமீரிடம் டெல்லி ED தலைமையகத்தில் ஒருசில முறை விசாரணையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
போதை பொருள் கடத்தல் வழக்கில் இயக்குனர் ஆமீரை குற்றவாளியாக அறிவித்தது ED
— Vettaiyan Coolie SakthiVelRajMIthra pandi Sri (@Sakrevathi09) November 14, 2024
இவர் சமீபகாலமாக #தமிழகவெற்றிக்கழகம் கட்சிக்கு சொம்படித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது#Vijay 🤡 கூட இருக்கவன் எல்லாம் மொள்ளமாறி முடிச்சவக்கியாகவே இருக்கிறாங்களே ஏன்?#Ameer | #DirectorAmeer pic.twitter.com/lVMmXJhpFR