Loading...
ஜார்ஜுகுட்டி மீண்டும் வருகிறான்: 'திரிஷ்யம் 4' படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்
'திரிஷ்யம் 4' படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்

ஜார்ஜுகுட்டி மீண்டும் வருகிறான்: 'திரிஷ்யம் 4' படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
12:09 pm

செய்தி முன்னோட்டம்

மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெற்றி திரைப்படத் தொடரான 'திரிஷ்யம்' அமைப்பின் 4-வது பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மழவில் மனோரமா விருதுகள் வழங்கும் விழாவில் ஆண்டனி பெரும்பாவூர் கலந்துகொண்டபோது இத்தகவலைத் தெரிவித்தார். மேடையில் பேசிய அவர், "திரிஷ்யம் தொடரின் 4-வது பாகம் நிச்சயமாக உருவாகும், இதைக் மனதார உறுதியாகக் கூறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்போது மேடையின் அருகில் இருந்த நடிகர் மோகன்லால் புன்னகையுடன் இதனை ஆமோதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வசூல்

'திரிஷ்யம் 3' வசூல் சாதனை

இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் கடந்த மே 21 அன்று திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3' மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்தது. திரையரங்குகளில் இப்படம் உலகளவில் ₹242 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

திரிஷ்யம் வரிசையிலேயே அதிக வசூல் செய்த படமாகவும், மலையாள சினிமா வரலாற்றில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.

ஒவ்வொரு பாகம் நிறைவடையும் போதும் அடுத்த பாகத்திற்கான கதையை யோசிக்குமாறு தயாரிப்பாளர் வலியுறுத்துவது வழக்கம் என இயக்குநர் ஜீத்து ஜோசப் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

3-வது பாகத்தின் முடிவில் ஜார்ஜுகுட்டியின் குடும்பத்தை பழிவாங்கத் துடிக்கும் சம்பவங்கள் குறித்து நிறைவுபெறாமல் முடிக்கப்பட்டதால், 4-வது பாகத்தில் வரவிருக்கும் திருப்பங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT