கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்
செய்தி முன்னோட்டம்
கேப்டன் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் அவர் சினிமாவில் எதிரிகளை பந்தாடிய காட்சிகள் தான் நினைவிற்கு வரும்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும், அவர் சட்டசபையில் கோபமாக பேசியதும், பிரச்சார கூட்டங்களில் ஆவேசமாக பொங்கியதும் தான் நினைவிற்கு வரும்.
இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்த், சினிமாதுறையில், ரஜினி மற்றும் கமலுக்கு மாற்றாக உருவானவர்.
யாருடைய சிபாரிசும் இன்றி, மதுரையிலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்து சாதித்து காட்டியவர் விஜயகாந்த். அவரின் நடிப்பு பற்றி பேசும் பலரும் அவரின் கொடை குணத்தை குறிப்பிட தவறுவதே இல்லை. ஆம், விஜயகாந்தை போல அடுத்தவர்களுக்கு உதவும் குணம் சினிமா துறையில் யாருக்குமே இல்லை என அனைத்து திரையுலக பிரபலங்களும் கூறக்கேட்டிருப்போம்.
card 2
தனுஷின் அக்காவிற்கு மெடிக்கல் காலேஜ் சீட்
அது போல ஒரு சம்பவத்தை, தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷின் அக்கா கார்த்திகா ஒரு பிரபல மகப்பேறு மருத்துவர். சிறுவயதில் இருந்தே மருத்துவம் படிக்கவேண்டும் என ஆசைப்பட்ட அவர், 12 பொதுத்தேர்வில் ஒரு மார்க்கில் மருத்துவ சீட்டை இழந்தார்.
இதற்காக, அவர் வீட்டில் அழுது புலம்பியதை கேட்ட விஜயகாந்த், தானாக முன்வந்து ஒரு பிரபல கல்லூரியின் நிறுவனரிடம் பேசியுள்ளார்.
அதன் பின்னர் கஸ்தூரி ராஜாவை அழைத்து, மறுநாள் அந்த கல்லூரிக்கு செல்லுமாறும், அவர் மகளுக்கு மருத்துவ சீட்டை உறுதி செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படி, மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை தன்னலம் பார்க்காமல் செய்த விஜயகாந்த், தற்போது உடல்நலம் குன்றி இருப்பது பலருக்கும் வருத்தத்தை வரவழைக்கிறது.