Page Loader
அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!
இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!

அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!

எழுதியவர் Venkatalakshmi V
May 17, 2023
10:53 am

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் வித்யாசாகர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், அவரின் மெல்லிசை பாடல்கள் பாடப்பட்டது. கூடவே, போட்டியாளர் ஒருவர் பாட்டெழுத, இரண்டே நிமிடத்தில், மெட்டமைத்து, பாடல் பாடினார் வித்யாசாகர். இது பலத்த கைதட்டல்களை ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியில், வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தனும் கலந்து கொண்டார். அவரும் நிகழ்ச்சியில் பாடல்களை பாடினார். ஹர்ஷவர்தன் பார்ப்பதற்கு மட்டுமல்ல, குரல்வளத்திலும் அவரின் தந்தையை போலவே உள்ளார் என பலரும் பாராட்டினார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதும், அவரின் பழைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தும் வைரலாக துவங்கி விட்டது. குறிப்பாக அவரும், ஷிவாங்கியும் இணைந்து பாடிய பாடல் வீடியோக்கள் மற்றும் வித்யாசாகரின் பாடல்களை mash-up செய்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Instagram அஞ்சல்

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்

Instagram அஞ்சல்

இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்