Page Loader
மீண்டும் விவகாரத்தா? வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் புதிய ட்வீட்
செல்வராகவன் மற்றும் அவரின் மனைவி கீதாஞ்சலி

மீண்டும் விவகாரத்தா? வைரலாகும் இயக்குனர் செல்வராகவனின் புதிய ட்வீட்

எழுதியவர் Saranya Shankar
Dec 28, 2022
01:01 pm

செய்தி முன்னோட்டம்

2003-ஆம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானவர் செல்வராகவன். இவர் இந்த படத்தில் அறிமுக நாயகியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து, 2006-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரின் கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் இரண்டாவதாக இயக்குனர் செல்வராகவன் தன்னுடன் உதவி இயக்குனராக இருந்த கீதாஞ்சலி ராமன் என்பவரை 2011-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் சமீப காலமாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

செல்வராகவனின் டிவீட்

ரசிகர்கள் அதிர்ச்சி

செல்வராகவனின் புதிய ட்வீட்டினால் ரசிகர்கள் அதிர்ச்சி

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தன் கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது இவர் ஒரு சர்ச்சையான ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் பதிவில் "தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் நீங்கள் இரண்டாவது முறையாக மீண்டும் விவாகரத்து செய்ய போகிறீர்களா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இவரின் தம்பி மற்றும் நடிகருமான தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக சமூகவலை தளங்களில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.