சூர்யா 44: கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்
நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரெட்ரோ லுக்கில் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒரு ஷெட்யூல் முடிவடைந்ததும் விட்டது. இந்த நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'தி ஒன்' எனத்தலைப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் முதல்முறையாக இணையும் இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைத்திருப்பது சந்தோஷ் நாராயணன். படத்தில் பூஜா ஹேக்டே நாயகியாக நடிக்கிறார்.