
நவீன 'முதல் மரியாதை'; 38 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில்!
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் பாரதிராஜா, 'சிவாஜி' கணேசன் மற்றும் ராதா ஆகியோர் நடிப்பில் 1985-ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல் மரியாதை'.
இந்த படம் மட்டுமல்ல, இளையராஜா இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மண்மணம் மாறாமல், அழகிய காதல் கதை ஒன்றை கூறி இருப்பார் பாரதிராஜா.
80களில், இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட படங்கள் வருவது மட்டுமில்லாமல், அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அபூர்வம்.
இந்த வெற்றி படம், தற்போது 38 ஆண்டுகள் கழித்து, தமிழ்நாடு முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதை அந்த படத்தின் நாயகி ராதா ட்வீட் செய்துள்ளார்.
இந்த படத்தில் முதலில் S.P.பாலசுப்ரமணியம் தான் நடிக்க இருத்தது. ஆனால், கால்ஷீட் காரணமாக, சிவாஜியை தேர்வு செய்தனர் என்பது கூடுதல் செய்தி.
ட்விட்டர் அஞ்சல்
மீண்டும் முதல் மரியாதை
This film then received lot of positive reviews and ran days in theatres. Making such beautiful movie reaching this generation also is a wonderful thought. Do watch this movie and let’s connect over here again with more memories and thoughts. From me , To you !!
— Radha Nair (@ActressRadha) March 24, 2023