LOADING...
ஒருவழியாக ரிலீஸாகும் GVM - விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஒருவழியாக ரிலீஸாகும் GVM - விக்ரமின் 'துருவ நட்சத்திரம்'

ஒருவழியாக ரிலீஸாகும் GVM - விக்ரமின் 'துருவ நட்சத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2026
02:25 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் முடங்கிக் கிடந்தது. தற்போது இந்த படத்தின் வெளியீட்டிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தில் முதலீடு செய்த கே.புண்ணியமூர்த்தி மற்றும் கே.பிரேம்குமார் ஆகியோர், படத்திலிருந்து வரும் வருவாய் முறையாக தங்களுக்கு வந்து சேர வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு பிரத்யேக வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும். படத்தின் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க ஒரு வழக்கறிஞர் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அடுத்து?

இயக்குனர் GVM-ன் அடுத்தகட்ட நகர்வு

படம் வெளியாவதற்கு முன்னதாக இருக்கும் நிலுவை தொகையை தீர்ப்பதற்கு, கௌதம் வாசுதேவ் மேனன் கூடுதல் முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்ட வேண்டியுள்ளது. மேலும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அவர் இறுதி செய்வார். ஒருவேளை தவிர்க்க முடியாத காரணங்களால் ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், கால அவகாசம் கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தயாரிப்புத் தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement