அடுத்த செய்திக் கட்டுரை
'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ்
எழுதியவர்
Venkatalakshmi V
Aug 07, 2023
01:41 pm
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ், அன்றும்,இன்றும்,எப்போதும், தானொரு ரஜினி ரசிகன்தான் எனக்கூறுவதுண்டு.
தனுஷ், ஐஸ்வர்யாவை திருமணம் செய்த புதிதில், அவரின் நடைஉடை பாவனை அனைத்தும், ரஜினி சாயலில் இருந்தபோது, 'திரையில் காணும் போதே, அவரை பார்த்து ஈர்க்கப்பட்டவன் நான்.தினமும் அவரை பார்க்கும்போது, அவரின் சாயல் என்னை அறியாமலேயே வருவது இயல்புதான்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து சென்ற ஆண்டு, ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் தேசிய விருதுகள் பெற்றபொழுது, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
ரஜினியின் ரசிகனாக துவங்கி, ரஜினியின் படத்தை தயாரிக்கும் வாய்ப்பையும் பெற்றார் தனுஷ்.
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் விவாகரத்து பெற்றபிறகு, ரஜினியிடம் இருந்து அவர் விலகியுள்ளார் என்ற பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது, 'இது ஜெயிலர் வாரம்' என்று ட்வீட் செய்துள்ளார் தனுஷ்