LOADING...
போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ்
போயஸ் கார்டன் வீட்டில் பால்காய்ச்சிய தனுஷ்

போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2023
04:32 pm

செய்தி முன்னோட்டம்

போயஸ் கார்டனில், தன்னுடைய நீண்ட நாள் கனவான, புது வீட்டை கட்டி, அதற்கு புதுமனை புகுவிழா கொண்டாடியுள்ளார், நடிகர் தனுஷ். இந்த விழாவின் புகைப்படங்களை, இயக்குனரும், தனுஷின் ரசிகர் மன்ற தலைவருமான சுப்பிரமணியம் சிவா பதிவிட்டிருந்தார். 2021 இல், தனுஷும், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், போயஸ் கார்டனில் மனை வாங்கி, பூஜை செய்தனர். இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதாவும் கலந்து கொண்டனர். ஆனால், சென்ற ஆண்டு, 2022 இல், இருவரும், தங்கள் 18 ஆண்டு கால, திருமண உறவை முறித்து கொள்வதாக அறிவித்தனர். தனுஷ் தற்போது கட்டியுள்ள இந்த கனவு வீட்டை, தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளதாக சுப்ரமணிய சிவா பதிவிட்டிருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

புது வீடு கட்டிய தனுஷ்