தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்துவருகிறார்.
இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் தனுஷ் தனது 50வது படத்தினை தானே இயக்கி நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ரூ.100 கோடி செலவில் எடுக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டது.
மேலும் இப்படத்தில் தனுஷுடன், சந்தீப் கிஷான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அவரது சகோதரர்களாக நடிக்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை வடசென்னையை மையமாகக்கொண்டு தனுஷ் எழுதியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது இணையத்தில் ஓர் போஸ்டர் மூலம் வெளியாகியுள்ளது.