Page Loader
தனுஷ் இயக்கும் இட்லி கடையின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இட்லி கடை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது

தனுஷ் இயக்கும் இட்லி கடையின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2025
06:26 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'இட்லி கடை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. பௌர்ப்பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கும் 4வது திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படத்தின் அறிவிப்பினை அடுத்து விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது படப்பிடிப்பு. இப்படத்தினை தனுஷின் ஒண்டர்பார் ஃபில்ம்ஸ் உடன் இணைந்து டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post