Page Loader
மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தனுஷ்
மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தனுஷ்

மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தனுஷ்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 18, 2023
06:16 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ், இன்று விநாயகர் சதுர்த்தியை தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தான் இயக்கி நடிக்கும் படத்தில் பிஸியாக உள்ளார். 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு முடிந்ததும், தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து நேர்த்தி கடனை செலுத்தினர் தனுஷ். சமீபகாலமாக, தான் கலந்து கொள்ளும் அநேக போது நிகழ்ச்சிகளுக்கும் தனது மகன்களையும் கூட்டி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் தனுஷ். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்றாலும், இருவரும் தங்கள் மகன்களுடன் நேரம் செலவழிக்க தவறுவதில்லை

Instagram அஞ்சல்

Instagram Post