
தனுஷின் கேப்டன் மில்லர் OTT ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!
செய்தி முன்னோட்டம்
தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம்,'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த ரிலீஸ் குறித்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'கேப்டன் மில்லர்' திரைப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது.
படத்தில் இடம்பெற்றிருந்த அதீத வன்முறை காட்சிகள் ஒருசாராரால் ரசிக்கப்படவில்லை.
இப்படத்தில், பிரியங்கா மோகன், ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
கேப்டன் மில்லர் OTT ரிலீஸ்
Tamil film #CaptainMiller (2024) will premiere on Amazon Prime, 9th February.
— OTT Gate (@OTTGate) February 2, 2024
Also in Telugu, Malayalam, Kannada. pic.twitter.com/WKHZD2r6hD