
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டி ஏஜிங் தொழில்நுட்பம் : இந்தியன்-2 குறித்த அப்டேட்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம்ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியினைப்பெற்றது.
அதனைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2ம்பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ்-லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில், காஜல்அகர்வால், ரகுல் பிரீத்சிங், சித்தார்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இவர்களோடு, முக்கிய வில்லனாக S.J.சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் முந்தையப்பாகத்தில் வரும் இளமையான கமல் வரும் காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
இதற்காக 20 ஆண்டுகள் இளமையாக கமலை காண்பிக்க இயக்குனர் ஷங்கர் டிஏஜிங் என்னும் வயதினை குறைத்து காண்பிக்கும் தொழிநுட்பத்தினை பயன்படுத்த முடிவு செய்துள்ளாராம்.
இதற்காக அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள லோலோ ஸ்டுடியோவில் இதற்கான பணிகள் தற்போது நடந்துவருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அமெரிக்காவில் உள்ள ஸ்டுடியோவில் ஷங்கர்
#Clicks | 'இந்தியன் 2' படத்தில் அதி நவீன தொழில்நுட்பம் - இயக்குநர் சங்கர் கொடுத்த அப்டேட்!#SunNews | #Indian2 | @shankarshanmugh pic.twitter.com/MUOJEUxnns
— Sun News (@sunnewstamil) July 23, 2023