DD 3: காதலர் தினத்தன்று தனுஷ் சொன்ன சர்ப்ரைஸ் நியூஸ்
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை, மாறாக அவர் இயக்கவுள்ளார்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என அந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சற்றே ரீவைண்ட் செய்தால், இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பதாகவும் இருந்தது.
ஆனால் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் கதையை தனுஷ் வாங்கியுள்ளதாகவும், அதை அவரே இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
வண்டர்பார் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை தனுஷ் இயக்குகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று, காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'
#Neek #dd3 @wunderbarfilms @gvprakash @theSreyas @wunderbarfilms pic.twitter.com/29zEHVsPdz
— Dhanush (@dhanushkraja) February 14, 2024