Page Loader
செப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம்
ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம்

செப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2023
06:06 pm

செய்தி முன்னோட்டம்

சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'DD ரிட்டர்ன்ஸ்'. சந்தானம் நாயகனாகவும், சுரபி நாயகியாகவும் நடித்திருந்தனர். ஏற்கனவே 'தில்லுக்கு துட்டு' என்ற பெயரில் இரண்டு ஹிட் படங்கள் தந்திருந்தார் சந்தானம். பேய்-க்கும், மனிதனுக்கும் நடக்கும் போராட்டத்தை, காமெடி கலந்து தந்திருப்பார். அதே வரிசையில், மூன்றாவது படமாக, இந்த தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ்/ டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை வெளியிட்டனர். இத்திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து, தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிவிட்டது. அதன்படி, வரும் செப்டம்பர் 1 முதல், ஜீ 5 தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post