Page Loader
நடிகர் ராம்சரண் 'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து தந்தை சிரஞ்சீவி பெருமிதம்
நடிகர் ராம்சரண் குறித்து தந்தை சிரஞ்சீவி பெருமித ட்வீட்

நடிகர் ராம்சரண் 'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து தந்தை சிரஞ்சீவி பெருமிதம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2023
05:09 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ராம்சரண் சமீபத்தில், அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான 'குட்மார்னிங் அமெரிக்கா'வில் பங்கேற்றார். அவரும், ஜூனியர் NTR-ம் இணைந்து நடித்த RRR திரைப்படம், உலக அரங்கில் சாதனை படைத்தது. ஆஸ்கர் விருது பட்டியலில் RRR திரைப்படமும் இணைந்துள்ளது. அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆஸ்கர் விருது விழாவை முன்னிட்டு, படக்குழுவினர் ஒவ்வொருவராக அமெரிக்காவிற்கு வருகை தந்துவருகின்றனர். ராம் சரணும், இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றார். அவர் அமெரிக்கா TV நிகழ்ச்சிகளில் சிறப்புக்கு விருந்தினராக பங்கு பெற்று வருகிறார். இதுகுறித்து, ராம்சரனின் தந்தையும், தெலுங்கு படவுலகின் 'மெகாஸ்டார்' சிரஞ்சீவி,"இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் கலந்து கொண்டது இந்திய சினிமாவுக்கும் மற்றும் தெலுங்கு திரையுலகுக்கும் பெருமையானது. ராஜமவுலியின் தொலைநோக்குப் பார்வை மூலம் பெரிய வெற்றி சாத்தியமாகியுள்ளது. வாழ்த்துகள்!" எனக்குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ராம்சரண் குறித்து தந்தை சிரஞ்சீவி!