Page Loader
#D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு
#D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு

#D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, ஜனவரியில் துவங்குகிறது படப்பிடிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 31, 2023
11:22 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ் இடைவேளையின்றி நடித்து வருகிறார். கடைசியாக 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், தன்னுடைய 50வது படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் தனுஷ். தானே இயக்கி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டம் என செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில், தனுஷ், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா என்பவருடன் #D51 திரைப்படத்திற்கு இணைவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், ரஷ்மிகா, நாகார்ஜூனா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது தேவிஸ்ரீ பிரசாத்.

ட்விட்டர் அஞ்சல்

#D51: தனுஷிற்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா