Page Loader
கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு
கனெக்ட் படத்தின் போஸ்டர்

கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு

எழுதியவர் Saranya Shankar
Dec 31, 2022
06:17 pm

செய்தி முன்னோட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா'வின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் 'கனெக்ட்.' இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ரவுடி பிக்சர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் போன்றோர் நடித்துள்ளனர். கோவிட் லாக் டவுன் நேரத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் ஒரு ஹாரர் படமாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இன்று ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படம் சுமார் 300 திரையரங்குகளில் ஹிந்தி மொழியில் வெளியாகி உள்ளது.

கனெக்ட் படம்

கனெக்ட் படத்தின் வரவேற்பிற்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்

தென்னிந்தியாவில் கனெக்ட் படம் வெளியான பிறகு தனக்கு கிடைத்த வரவேற்பிற்காக நயன்தாரா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். கனெக்ட் படத்தின் ஹிந்தி மொழியில் இன்று வெளியாகிறது "#கனெக்ட் ஒரு பெரிய வெற்றியைப் பெற உதவியதற்கு நன்றி நண்பர்களே ♥️ இது எனக்கு ஒரு நிறைவான ஆண்டு, நான் நன்றியுணர்வுடன் நிறைந்திருக்கிறேன். கனெக்ட் பார்த்து ஆதரவளித்த அனைத்து திரைப்பட ரசிகர்களுக்கும் எனது நன்றி" என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படம் ஹிந்தி மொழியில் வெளியானத்திற்கு நயன்தாரா தனது சமூக வலைத்தளங்களில் நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார்.

Instagram அஞ்சல்

நயன்தாராவின் பதிவு