
கக்கன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான கக்கன் வாழ்க்கை வரலாறு, படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை, பிரபு மாணிக்கம் என்பவர் இயக்க, 'தேனிசைத்தென்றல்' தேவா இசை அமைத்துள்ளார்.
ஜோசப் பேபி என்பவர் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன், தயாரித்தும் இருக்கிறார். அவரே தான் இப்படத்தில், கக்கனாகவும் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர், 'என் காதலி சீன் போடுறா', 'இரும்பு மனிதன்' போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, இன்று காலை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
விழாவிற்கு தலைமையேற்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இசையையும், ட்ரைலரையும் வெளியிட்டார்.
இந்த விழாவில், தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், அமைச்சர் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
கக்கன் திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்ட முதலமைச்சர்
கக்கன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#Kakkan | #Movie | #MKStalin | #CMOTamilnadu | #TNGovt | #KSAlagiri | #DMK | #Congress | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/BWaYE2dI4z
— News7 Tamil (@news7tamil) July 25, 2023