நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு
லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா'வின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த திரைப்படம் கனெக்ட். கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நயன்தாராவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி விக்னேஷ் சிவன் தயாரித்து உள்ளார். வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் ஒரு 'ஹாரர் த்ரில்லர்'. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் போன்றோர் நடித்துள்ளனர். கொரோனா லாக் டவுன் காலகட்டத்தை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனிடையே இந்த படம் வரும் 22-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இடைவேளை இல்லாததால் இடையூறான நயன்தாராவின் கனெக்ட்
கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களையொட்டி வெளியாக இருக்கும் இந்த படம் வெறும் 99 நிமிடங்கள் ஓடும் இடைவேளை இல்லாத திரைப்படம் என இயக்குனர் அஸ்வின் சரவணன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இடைவெளி இல்லாத இந்த படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இடைவேளை இல்லாமல் இந்த படத்தை வெளியிட்டால் திரையரங்கு வியாபாரம் பாதிக்கப்படும். இதனால் இப்படத்திற்கு இடைவேளை இல்லை என்று தெரிவித்து இருந்தாலும் திரையரங்குகளில் இடைவேளை விட்டு தான் திரையிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இப்படத்தில் இடைவேளை இல்லை என முன்னரே படக்குழுவினர் எங்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை என கூறி திரையரங்கு உரிமையாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.