LOADING...
13 வயது இளம் கார் பந்தய வீரரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்; யார் இந்த ஜேடன் இமானுவேல்?
13 வயது இளம் கார் பந்தய வீரரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்

13 வயது இளம் கார் பந்தய வீரரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்; யார் இந்த ஜேடன் இமானுவேல்?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2025
05:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச பைக் மற்றும் கார் பந்தய வீரருமான நடிகர் அஜித் குமார், 13 வயது இளம் ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் ஆசையாக ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்த செயல், பல ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேடன் இமானுவேல், வெறும் 10 வயதிலிருந்தே ஜெர்மனியில் MINI GP பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பாவில் மூன்று சீசன்களையும் வெற்றிகரமாக முடித்த முதல் இளம் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சினிமாவைத் தாண்டி, கார் மற்றும் பைக் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித், திறமையான இளம் இந்திய ரேஸர்களை ஊக்குவிப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஃபார்முலா ஒன்

இந்தியாவில் இருந்து ஃபார்முலா ஒன் சாம்பியன்கள்

ஒருமுறை பந்தயம் குறித்துப் பேசும்போது, அவர், "என்னை பிரபலப்படுத்த வேண்டாம், பந்தயத்தில் ஈடுபடும் இளம் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பலருக்கும் தெரியாது. ஒருநாள் இந்திய வீரர்களும் ஃபார்முலா ஒன் சாம்பியனாவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். தற்போது, அவர் ஜேடன் இமானுவேலிடம் ஆட்டோகிராஃப் வாங்கியது, இளம் வீரர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தின் ஒரு குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அஜித்தின் இந்த செயல், ஜேடனைப் போன்ற இளம் ரேஸர்களுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். இதற்கிடையே, சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.