சந்திரமுகி 2: வேட்டையன் ராஜா லுக்கில் கலக்கும் ராகவா லாரன்ஸ்
ரஜினிகாந்த்-பிரபு- ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'. இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனாவும் நடிக்கின்றனர். மேலும் இத்திரைப்படத்தில், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கார் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை, வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார் படக்குழுவினர்.