Page Loader
ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம்
ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம்

ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்கள் குறித்து புதிய கோரிக்கை முன்வைத்த மத்திய அமைச்சகம்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 14, 2023
05:21 pm

செய்தி முன்னோட்டம்

நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி மற்றும் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களில் அருவருக்கத்தக்க மற்றும் வன்முறை நிறைந்த காட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து சரிபார்த்து பின்பு வெளியிட வேண்டும் எனத் கேட்டுக் கொண்டிருக்கிறது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். ஓடிடி நிறுனங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கிடைய கடந்த மாதம் 20-ம் தேதி நிகழ்ந்த சந்திப்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கு ஓடிடி தளங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களில் வன்முறைக் காட்சிகள் மற்றும் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது குறித்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து அதிக அளவில் புகார்கள் வருவதாகக் குறிப்பிட்டிருக்கிறது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.

ஓடிடி

என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன? 

இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மத்திய அரசின் தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்ட பின்பே வெளியிடப்படுகின்றன. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களுக்கு அந்த விதமான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. எனவே, தங்கள் தளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை அந்நிறுவனங்களே சரிபார்த்து, தேவையற்ற காட்சிகளை நீக்கி பின்பு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது மத்திய அமைச்சகம். மேலும், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் ஒவ்வொரு உள்ளடக்கத்திற்கும் தொடக்கத்தில் 50 நொடி புகையிலை சுகாதார எச்சரிக்கை காணொளியைச் சேர்க்க வேண்டும் எனவும், அந்நிறுவனங்களை வலியுறுத்தியிருக்கிறது மத்திய அரசு. அதற்கும் ஓடிடி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பில் அமேசான், டிஸ்னி, நெட்ஃபிலிக்ஸ் மற்றும் வயகாம் 18 உள்ளிட்ட தளங்கள் கலந்துகொண்டன.