
அரிய நோய் தினம் 2023: அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட பிரபலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
நீரிழிவு, இதய நோய்கள் போன்றவை தாண்டிய அரியவகை நோய்களும் உலகில் உண்டு. அது பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கு நிகழும். சில நோய்களுக்கு மருத்துவம் உண்டு. பல அரிய நோய்களுக்கு மருந்துகள் இல்ல.
பிப்ரவரி 28-ல் அனுசரிக்கபடும், அரிய நோய் தினம் என்பது அரிய நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்நாளில், இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சில பிரபலங்களை பற்றி காண்போம்.
சமந்தா ரூத் பிரபு: சமந்தா, மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, உடலின் தசைகளைத் தாக்கி, அவற்றை பலவீனப்படுத்துகிறது. தொடர்ந்து ஏற்படும் வீக்கம் மற்றும் தசை பாதிப்பு காரணமாக, எழுவது, கைகளில் பொருட்களைப் பிடித்துக் கொள்வது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அடிப்படை செயல்பாடுகள் கூட கடினமாகும்.
நோய்
அமிலாய்டோசிஸ் நோயால் இறந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி
வருண் தவான்: பாலிவுட்டின் முன்னணி நடிகரான வருண் தவான், வெஸ்டிபுலர் ஹைப்போஃபங்க்ஷனுடன் போராடி வருகிறார். இது உடலில் உள்ள வெஸ்டிபுலர் அமைப்பின் பன்முகக் கோளாறு ஆகும். சமநிலையின்மை, தலைச்சுற்றல் மற்றும் ஆஸிலோப்சியா போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
பர்வேஸ் முஷாரஃப்: பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி, அமிலாய்டோசிஸ் நோயால் இறந்தார். அமிலாய்டோசிஸ் என்பது உறுப்புகள் மற்றும் திசுக்களில் அமிலாய்டு (அசாதாரண புரதம்) கட்டமைப்பால் ஏற்படும் அரிதான மற்றும் தீவிரமான நோய். தற்போது, அமிலாய்டோசிஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லை.
புரூஸ் வில்லிஸ்: 67 வயதான ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ், Frontotemporal dementia நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது ஒரு நபரின் மூளையின் முன் மற்றும் பக்கங்களை பாதிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, விஞ்ஞானிகள் இன்னும் இதற்கு சிகிச்சையைக் கண்டுபிடிக்கவில்லை.