Page Loader
அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள்
தமிழ் நடிகைகளை பாதித்த அரிய வகை நோய்கள்

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள்

எழுதியவர் Saranya Shankar
Dec 17, 2022
11:23 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரை உலகில் பிரபலங்களாக பார்க்கப்படும் திரைப்பட நடிகர்கள் அன்பு, பாசம், வெறுப்பு, கோபம் போன்ற எண்ணற்ற உணர்ச்சிகளை, தன் நடிப்பின் திறமையின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் நோயினால் பாதிக்கக் பட்டிருந்தாலோ அல்லது மனதிற்கு வருத்தையை கொடுக்க கூடிய வேறு பிரச்சனைகளில் இருந்தாலோ அதனால் ஏற்படும் உணர்ச்சிகளை மறைத்துவிடுகிறார்கள். அவர்கள் கேமராவில் வரும் தருணத்தில் அனைத்தையும் விட்டு விடுகிறார்கள். பிரபலமாகவே இருப்பினும், அவர்களும் நம்மை போலவே பல ஏற்றங்களையும், தாழ்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அரிய நோயினை எதிர்த்து போராடி வரும், பாதிக்கப்பட்ட தென் இந்திய நடிகைகளை பற்றி பார்ப்போம்.

அரிய நோய்

அரிய நோயினால் பாதிக்கப்பட்ட திரைப்பட நடிகைகள்

சமீப காலமாகவே நடிகை சமந்தா ரூத் பிரபு பல்வேறு இன்னல்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். மயோசிடிஸ் என்ற அரிய தசை நோய் இருப்பது கண்டறியப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் என நாம் அனைவரும் அறிவோம். மேலும் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து டோலிவுட் நடிகை பூனம் கவுர், 'ஃபைப்ரோமியால்ஜியா' என்ற அரிய தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கோ மற்றும் ஏகன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்தவர் பியா பாஜ்பே. இவருக்கும் சமந்தாவை போன்று மயோசிடிஸ் நோய் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.