துபாயில் சிக்கியுள்ளவர்களுக்கு தற்காலிக இலவச தங்குமிடம் வழங்குவதாக அறிவித்த பிரபல பாலிவுட் நடிகர்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக வளைகுடா நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது ஈரான். குவைத், கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இந்த தளங்களின் அருகே குடியிருப்பவர்களை தற்காலிக இடங்களில் நகர்த்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் துபாயில் மாறியுள்ள எந்த நாட்டின் குடிமக்களும் தற்காலிக தங்குமிடத்திற்கு தன்னை அணுகுமாறும், அவர்கள் பத்திரமாக நாடு திரும்பும் வரை இலவசமாக அங்கே தாங்கிக்கொள்ளலாம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
War has left many travelers stranded in Dubai.
— sonu sood (@SonuSood) March 5, 2026
If you or someone you know has nowhere to stay, we are offering safe accommodation free of cost.
No nationality. No conditions. Just humanity.
DM us on Instagram if you need help.
@dugastaproperties
Please share so this reaches… pic.twitter.com/TDDr9st79M
தொண்டு
Covid காலத்தில் வறியவர்களுக்கு தொண்டு புரிந்த சூட்
பாலிவுட் நடிகர் சோனு சூட் பல ஆண்டுகளாக நடிப்பு துறையில் இருக்கிறார். ஆனால் COVID-19 தொற்றுநோய்களின் போது சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் நலிந்தவர்களுக்கு உதவுவதற்கான தனது அயராத முயற்சிகளுக்காக நாடு முழுவதிலும் பிரபலமாக அறியப்பட்டார். தனது அறக்கட்டளை மூலமாக, ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது மற்றும் பஞ்சாப் வெள்ளத்தின் போது உதவி வழங்கியது என பல பரோபகாரங்களை அவர் புரிந்துள்ளார். ஹிந்தி தவிர, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார் சோனு சூட். அவர் கடைசியாக தமிழில் பிரபு தேவா, தமன்னா நடித்த 'தேவி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.