
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா தற்செயலாக ரிவால்வரால் முழங்காலில் சுட்டுக்கொண்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகரும், சிவசேனா தலைவருமான கோவிந்தா செவ்வாய்க்கிழமை மும்பையில் உள்ள தனது உரிமம் பெற்ற ரிவால்வரால் தற்செயலாகத் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நடிகரின் ரிவால்வரை சுத்தம் செய்யும் போது, அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்ததில், தற்செயலாக சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி தோட்டா அவரது முழங்காலைத் தாக்கியது என அவரது PA தெரிவித்துள்ளார்.
அதிகாலை 4.45 மணியளவில் கோவிந்தா வெளியே செல்ல தயாராகி, உரிமம் பெற்ற ரிவால்வரை சோதனை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
கோவிந்தா ஒரு நிகழ்ச்சிக்காக கொல்கத்தா செல்லவிருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது நடிகர் கோவிந்தா மும்பை க்ரிட்டிகேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி!#SunNews | #ActorGovinda | #Mumbai pic.twitter.com/yGIUgm18u0
— Sun News (@sunnewstamil) October 1, 2024