பிக் பாஸ் தமிழ் 8: பணப்பெட்டியை எடுக்கும் முயற்சியில் அதிர்ச்சிகரமாக வெளியேறிய போட்டியாளர்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவடையவுள்ளது.
கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக தீபக் வெளியாக, தற்போது இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன், ஜாக்குலின், ராயன், செளந்தர்யா, பவித்ரா மற்றும் விஷால் ஆகிய ஆறு பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
முந்தைய சீசன் படி, வீட்டிற்குள் பெட்டி வைக்கப்படாமல், அதுவும் ஒரு டாஸ்க்காக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள், குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் பணப்பெட்டியை போட்டியாளர்கள் சென்று எடுக்க வேண்டும். அப்படி எடுப்பவர்களுக்கு பணப்பெட்டி சொந்தம். எடுக்க முடியாதவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் எனக்கூறப்பட்டது.
அதன்படி நேற்று ஜாக்லின் பெட்டி எடுக்க சென்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப முடியாததால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அதிர்ச்சி
ஜாக்லின் வெளியேற்றத்தால் அதிர்ச்சியடைந்த ஹவுஸ் மேட்ஸ்
பெட்டி டாஸ்க்கில் முதலில் 50 ஆயிரம் மதிப்புள்ள பணப்பெட்டி வைக்கப்பட்டது, அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்து உள்ளே வந்தார்.
பின்னர் 2 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை ரயான் எடுக்கச் சென்றார், அவரும் 17 விநாடிகளிலேயே பெட்டியை எடுத்து வந்தார்.
இன்று, 8 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டி வைக்கப்பட்டது, அதை எடுக்க 35 விநாடிகள் நேரம் கொடுக்கப்பட்டது. ஜாக்குலின் அந்த பணப்பெட்டியை எடுத்து வரச் சென்றார், ஆனால் அவர் 37 விநாடிகள் எடுத்ததால், கதவுகள் மூடப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டார்.
டைட்டில் ஜெயிக்க விரும்பிய ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்கில் வெளியேற்றப்பட்டதை அறிந்த ஹவுஸ் மேட்ஸ் மற்றும் ஜாக்லின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்