
பிக் பாஸ் தமிழ் 9: முதல் வாரத்திலேயே வெளியேறிய பிரவீன் காந்தி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான எலிமினேஷன் முறையின் மூலம் முதல் வார இறுதியில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
சம்பளம்
பிரவீன் காந்தியின் ஒரு வார சம்பளம்
ஒரு வாரம் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்த பிரவீன் காந்திக்கு வழங்கப்பட்ட சம்பள விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தகவலின்படி, ஒரு நாளைக்கு ரூ.35,000 என்ற அடிப்படையில், ஒரு வாரத்திற்கு அவர் மொத்தமாக ரூ.2.45 லட்சம் சம்பளத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சீசனிலேயே அதிக சம்பளத்திற்கு போட்டியிட்ட போட்டியாளர் பிரவீன் காந்தி தான் எனவும் கூறப்படுகிறது.
RJ நந்தினி
நந்தினியின் அதிரடி வெளியேற்றம் மற்றும் சம்பளம்
பிரவீன் காந்திக்கு முன்னதாகவே, RJ நந்தினி என்ற போட்டியாளர், நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்களிலேயே வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். நிகழ்ச்சி தொடக்கத்திலேயே நந்தினி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், "இங்கு எல்லாமே போலியா இருக்கு" என்று குற்றம் சாட்டி சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக பிக் பாஸே அதிருப்தியடைந்து உடனடியாக அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நந்தினிக்கு ஒரு நாளைக்கு ரூ.10,000 என்ற அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐந்து நாட்கள் மட்டுமே அவர் தங்கியிருந்ததால், அவருக்குச் சம்பளமாக மொத்தமாக ரூ.50,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாம். இதன் மூலம், பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகக் குறைந்த சம்பளத்துடன் வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவராக நந்தினி மாறியுள்ளார்.