
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் கசிந்த லிஸ்ட்
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ், இப்போது தனது அடுத்த புதிய சீசனுக்கான தயாரிப்பில் இறங்கியுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 9-வது சீசனுக்கான போட்டியாளர்கள் லிஸ்ட் இணையத்தில் லீக் ஆன நிலையில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய சீசன் போலவே, இந்த சீசனுக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக வருகிறார். கடந்த சீசனில் கமல்ஹாசனின் பிஸியான திரைபணிகள் காரணமாக, ஹோஸ்டிங் பணியை ஏற்ற விஜய் சேதுபதி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால், இந்த சீசனும் அவரே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.
போட்டியாளர்
லீக் ஆன போட்டியாளர்கள் விவரம்
ஷபானா- குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்றவர் உமைர் - குக் வித் கோமாளி போட்டியாளர் வினோத் பாபு - 'தென்றல் வந்து என்னை தொடு' சீரியல் நடிகர் புவி அரசு - மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை மூலம் பிரபலமானவர் நேஹா மேனன்- 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை அக்ஷிதா அசோக் - 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை பால சரவணன்- தமிழ் சினிமா காமெடி நடிகர் VJ பார்வதி - இன்ஸ்டாகிராம் பிரபலமும், முன்னாள் விஜேவும் சதீஷ் கிருஷ்ணன் - நடன இயக்குனர் அம்ருதா ஸ்ரீனிவாசன் - திரைப்பட நடிகை புரோமோ ஷூட் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.