LOADING...
பிக்பாஸ் தமிழ் சீசன் 9: முதல் நாளே வெடித்த சண்டை, வெளியேறும் போட்டியாளர் இவரா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக தொடங்கியது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: முதல் நாளே வெடித்த சண்டை, வெளியேறும் போட்டியாளர் இவரா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2025
04:53 pm

செய்தி முன்னோட்டம்

ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'பிக்பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக தொடங்கியது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனுக்காக பிக்பாஸ் வீடு கலைநயத்துடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் முதல் போட்டியாளராக 'வாட்டர் மெலன் ஸ்டார்' என தனக்கு தானே பட்டம் அளித்துக்கொண்ட இன்ஸ்டா பிரபலம் திவாகர் நுழைந்தார். இவரைத்தொடர்ந்து அரோரா, FJ, விக்கல்ஸ் விக்ரம், கனி, ரம்யா ஜோ, சபரி நாதன், கெமி, ஆதிரை, கானா வினோத், பிரவீன் காந்தி, கம்ருதீன், VJ.பார்வதி, பிரவீன் தேவசகாயம், அப்சரா, சுபிக்ஷனா, துஹார், நந்தினி, கலையரசன் உள்ளிட்ட மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

வெளியேற்றம்

முதல் நாளே வெளியேற்றப்படும் போட்டியாளர்?

ஆரவாரத்துடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல் நாளே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, முதல் புரோமோ வெளியானது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், "ஒரு நாள் உள்ளே இருந்தால் போதும், இவரிடம் இதற்கு மேல் சரக்கு இல்லை" என்று கருதுபவரை ஓபன் நாமினேஷன் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். இந்த நாமினேஷனில் அதிகபட்சமாக ஓட்டுகள் பெற்றது திவாகர் மற்றும் கலையரசன் ஆகிய இருவரும் தான். எனவே, இவர்கள் இருவரில் ஒருவர் இன்று அல்லது நாளை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இரண்டாவது புரோமோவில், கெமி மற்றும் கம்ரூதின் இடையே முதல் சண்டை வெடித்துள்ளது எனவும் காட்டப்பட்டுள்ளது. இன்று என்ன நடக்கபோகுது என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.