
பிக்பாஸ் தமிழ் சீசன் 8: கேப்டன் சத்யா, முட்டி மோதிய ஹவுஸ்மேட்ஸ், பரபரப்பான வீடு!
செய்தி முன்னோட்டம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல், சத்யா இந்த வாரம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரவீந்தர் சந்திரசேகர் முதல் வாரத்தில் எலிமினேட் ஆன பின்னர், இந்த வார நாமினேஷனில் பலர் இடம் பிடித்துள்ளனர்.
18 போட்டியாளர்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில், சாச்சனா மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக திரும்ப வந்தார். பிக்பாஸ் 8ஆம் நாளான நேற்று கேப்டனுக்கான போட்டி நடைபெற்றது.
பெண்கள் அணியிலிருந்து ஜாக்குலின், சவுந்தர்யா, பவித்ரா மற்றும் ஆண்கள் அணியிலிருந்து விஷால், சத்யா, தீபக் ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர். "தலைவனா - தலைவியா?" என்ற போட்டியில், பிளாக்கில் லாக் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில், சத்யா வெற்றி பெற்று கேப்டனாக உள்ளார்.
அணி மாற்றங்கள்
நாமினேஷன் மற்றும் அணி மாற்றங்கள்
போட்டியின் நடுவே சுனிதா மற்றும் தர்ஷிகா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் மாறின. சத்யாவிற்கு, 23 கிங் கிரவுனை தர்ஷிகா சூட்டினார். இந்த வாரம் 2 நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்.
கேப்டன் சத்யா மற்றும் எலிமினேஷன் பாஸ் பெற்ற அருண் பிரசாத்தை யாரும் நாமினேட் செய்ய முடியாது. பவித்ரா மற்றும் முத்துக்குமரன் நேரடியாக நாமினேஷன் ஆனார்கள்.
நாமினேஷனில் ரஞ்சித், முத்துக்குமரன், ஜெஃப்ரி, விஷால், அர்னவ், சாச்சனா, தர்ஷா, சவுந்தர்யா, தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் ரஞ்சித் எலிமினேட் செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. இல்லையெனில், சாச்சனா 2வது முறையாக வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது.