பிக் பாஸ் தமிழ் சீசன் 8: பேமிலி வீக் தொடங்கியது, முதல் நாளில் வந்தது யார்?
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது.
இரு மாதங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டதால், தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரஞ்சித், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா ஆகிய 12 பேர் எஞ்சி உள்ளனர்.
சென்ற வாரம் பிக்பாஸ் அறிவித்தது போல இந்த வாரம் நாமினேஷன் ஃபிரீ பாஸிற்கான டாஸ்க் ஏதும் நடைபெறவில்லை.
மாறாக இந்த வாரம் பேமிலி வீக் தொடங்கியது. ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் அவர்களை BB ஹவுசில் சந்திக்கும் வாரம் இது.
ப்ரோமோ
முதலில் வீட்டிற்குள் வந்தது தீபக்கின் மனைவி மற்றும் மகன்
அதன்படி, இன்று காலை வேக்-அப் சாங் பாடும் முன்னரே, விடிந்ததும் தீபக்கின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்தனர்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவின் படி, தீபக்கின் மனைவி மற்றும் மகன் வந்திருந்தனர்.
தீபக், விஜய் சேதுபதியிடம் கேட்டது போலவே, தீபக்கின் மகன், 'ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யூ!' என்றார். தீபக் உணர்ச்சிவசப்பட்ட தருணமும் இருந்தது.
இதனை அடுத்து இன்று மஞ்சரியின் மகன் வீட்டிற்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்-மகனின் எமோஷனல் மொமெண்ட்ஸ் நடக்கும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களை தவிர, ராயனின் வீட்டிலிருந்தும், VJ விஷால் வீட்டிலிருந்தும் இன்றும் நாளையும் வரக்கூடும் என சொல்லப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Day79 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) December 24, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/YAaRyzFhAj