பிக் பாஸ் தமிழ் சீசன் 8: மனமுடைந்த 'சவுண்ட்' சௌந்தர்யா; சிக்கலில் அருண்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 மூன்றாவது வாரம் நேற்று துவங்கியது. நேற்றைய நிகழ்வின் துவக்கத்திலேயே பெண்கள் அணி, ஸ்ட்ராட்டஜி செய்து விளையாடும் ஆண்கள் அணி மீது கடும் அதிர்ச்சியில் இருந்தது வெளிப்பட்டது. குறிப்பாக அன்றிரவு உறங்க செல்லும் முன்னர் ஜாக்குலின், அந்த அணியில் சண்டை வெடிக்க வேண்டும் என சாபம் தரும் அளவிற்கு பேசினார். அதே போல நேற்று ஆண்கள் அணியில் லேசாக புகைய ஆரம்பித்துள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்டதா சௌந்தர்யாவிற்கு?
அடுத்ததாக நேற்று ஆண்கள் அணிக்கு செல்ல போவது யார் என பேச்சு எழுந்தது. அப்போது சௌந்தர்யா, தான் இதுவரை நிகழ்ச்சியில் வெளியே தெரியாதது போன்ற பிம்பம் உள்ளது எனவும், அதை உடைக்க தான் ஆண்கள் ஹவுஸிற்கு செல்ல வேண்டும் எனவும் கூறினார். அதற்கு முன்னரே பெண்கள் அணியில் அனைவரும் சௌந்தர்யா அங்கே சென்றால், தங்கள் அணிக்கு சாதகமாக உதவ மாட்டார் எனவும், ஆண்கள் அணியில் ஒன்றி விடுவார் எனவும், எனவே அவரை அனுப்பக்கூடாது என ஒருசேர முடிவெடுத்திருந்தனர். அதனால், சௌந்தர்யா தான் போக வேண்டும் என விருப்பம் தெரிவித்த போது, தங்கள் அணிக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே அந்த அணிக்கு செல்ல முடியும் என கூறியதில் சவுண்ட் மனமுடைந்து விட்டார்.
சாச்சனா மற்றும் ஜெப்ரி அணி மாறினர்
முன்னதாக கேப்டன்சி டாஸ்கில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வாரத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற நாமினேஷனில், தீபக் மற்றும் தர்ஷா குப்தா நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர். அவர்களை தவிர, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் 8 போட்டியாளர்கள் இடம்பெற்று உள்ளனர். அதன் பின்னர் இரு அணிகளும் தங்கள் அணியிலிருந்து எதிர் அணிக்கு செல்ல போவது யார் என முடிவெடுத்து பிக் பாஸிடம் தெரிவித்தனர். அப்போது ஜெப்ரியிடம் தனியாக புலம்பிய சௌந்தர்யா, தன்னால் பெண்கள் அணியில் இருக்க முடியவில்லை என புலம்பி கண்ணீர் வடித்தார்.
இன்றைய முதல் ப்ரோமோ; அருண் மீது பாய தயாராகும் பெண்கள் அணி
இந்த நிலையில் இன்றைய நிகழ்வின் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. அதில் சாசனவிற்கு கடும் வயிற்று வலி இருப்பதால், அவரை கன்பெக்ஷன் ரூமிற்க்கு அழைத்து சென்றார் அருண். அந்த அறை பெண்கள் அணியிடம் இருப்பது. உரிய அனுமதி இன்றி அந்த அறைக்கு செல்லக்கூடாது என்பது விதி. அருண் தற்போது சாச்சனாவை அந்த அறைக்கு அழைத்து சென்றதை பார்த்த பெண்கள் அணி, அதை வைத்துக்கொண்டு, அருணின் நாமினேஷன் ஃபிரீ பாஸை கேன்சல் செய்யவேண்டும் என காய் நகர்த்த திட்டமிட்டு வருகின்றனர். பெண்கள் அணி செய்வது சரியா? அவர்களது கோரிக்கையை பிக் பாஸ் ஏற்பாரா?