பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இன்று, அடித்து காட்டவிருக்கும் ஹவுஸ்மேட்ஸ், கண்கலங்கும் தர்ஷா!
செய்தி முன்னோட்டம்
தமிழில் பிக் பாஸ் 8 சீசன் இரு வாரங்களுக்கு முன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த முறை புதிய ட்விஸ்ட்கள் மற்றும் சவால்களுடன் நிகழ்ச்சி மெருகேற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
அதற்கேற்றாற்போல, முதல் தினத்திலேயே, பிக் பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு அணிகளாக பிரித்து விளையாடி வருகின்றனர்.
ஆட்டம் துவங்கியதும், முதல் எவிக்ஷன் 24 மணி நேரத்திற்குள் நடைபெறும் என முதல் ஷாக் தந்தார் பிக்பாஸ். அதில் அதிக ஓட்டுகள் பெற்று சாச்சனா வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் அவர் சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்ததும், முதல் வாரத்திற்கான நாமினேஷனில் ரவீந்தர் வெளியேறினார்.
ப்ரோமோ 1
அடிச்சு காட்டு...
இந்த வாரத்தில், தீபக், ஜாக்குலின், அர்னவ், ரஞ்சித், விஷால், ஜெஃப்ரி, முத்துக்குமரன், சாச்சனா, தர்ஷா குப்தா, சவுந்தர்யா ஆகிய 10 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று புதிய புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், யார் கெத்து என்பதை கண்டறிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
இன்றைய டாஸ்கில், எந்த அணி அறிவில், திறமையில், மற்றும் ஒற்றுமையில் சிறந்தது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் போட்டி நடைபெறுகிறது.
வெற்றி பெற்ற அணிக்கு நாமினேஷன் ஃப்ரீ வழங்கப்படும். இதில் ஆண்கள் அணி ஒரு கேள்வியின் போது அடித்து பிரண்டு ஓடி அந்த பஸ்ஸரை அடிக்க ஓடுகின்றனர்.
அதில் அந்த ஸ்டாண்ட்டே உடைந்து விடுகிறது. ஆட்டத்தின் இறுதியில் எந்த அணி வெற்றி பெறும்? யார் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வெல்வார்கள்?
embed
Twitter Post
#Day11 #Promo1 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil pic.twitter.com/Tg9kdjsNwp— Vijay Television (@vijaytelevision) October 17, 2024 #Day11 #Promo1 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil pic.twitter.com/Tg9kdjsNwp— Vijay Television (@vijaytelevision) October 17, 2024
அழுகை
தர்ஷாவின் அழுகை...
ஆண்கள் அணியில் உள்ள தர்ஷா அவர்களுடனும் இணக்கம் இல்லாமல் சண்டை போட்டு வாக்குவாதம் செய்து வருகிறார்.
டாஸ்குகளில் தன்னை முன்னிறுத்த வேண்டும் என நேற்று சண்டை போட்ட நிலையில், இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், அவர் பெண்கள் அணியிடம் அழுது புலம்புவது தெரிகிறது.
தான் சமைப்பதை அனைவரும் குறை கூறுகிறார்கள் எனவும், ஆண்கள் அணி, பெண்கள் அணி என அனைவரும் தன்னை டார்கெட் செய்கிறார்கள் எனவும் அவர் அழுது கொண்டிருக்கிறார்.
உண்மையில் தர்ஷாவிற்கு என்னதான் ஆச்சு?
embed
Twitter Post
#Day11 #Promo2 of #BiggBossTamil Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/etgx3fG6Xg— Vijay Television (@vijaytelevision) October 17, 2024