13 போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் தந்த ஷாக் டிரீட்மென்ட்; கதறியழுத முத்துக்குமரன்
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 -இல் இந்த வாரம் முழுவதும் நாமினேஷன் பிரீ பாஸுக்கான டாஸ்குகள் நடைபெற்ற நிலையில், டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய முத்துக்குமரன், பவித்ரா மற்றும் ஜெப்பிரி ஆகியோருக்கு இடையேயான கேப்டன்சி டாஸ்க் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெறுபவரே அடுத்த வாரம் பிக்பாஸ் ஹௌஸின் கேப்டனாக பதவி வகிப்பார். இந்த நிலையில் இன்று வெளியான 3 ப்ரோமோக்களின் படி, கேப்டன்சி டாஸ்கில் விதிமீறல் நடந்திருப்பதும், அதற்கு பிக்பாஸ் கண்டிப்பதும் தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
பேக்ஃபயர் ஆன முத்துவின் பிளான்; கடுப்பான பிக்பாஸ்
கேப்டன்சி டாஸ்க்கின் விதிப்படி போட்டியாளர்களுக்கு பெரிய பந்து தரப்பட்டது. அதை கொண்டு கோல் போட வேண்டும். அதே நேரத்தில் எதிராளி தன்னுடைய பக்கம் கோல் போடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென விதிமுறைகள் கூறப்பட்டது. ஆனால், முத்துக்குமரன், ஏற்கனவே கேப்டன் ஆக இருந்துள்ளார். அதனால், பவித்ராவுக்கு விட்டுக்கொடுக்க நினைத்து அவரின் கோலை தடுக்காமல் விட்டுவிட்டார். ப்ரோமோவின் படி, இதை பார்த்த பிக்பாஸ் கடுப்பாகிவிட்டார். ஹவுஸ் மேட்ஸை கண்டித்த அவர், இந்த வாரம் கேப்டன்சி ரத்து செய்யப்படுகிறது எனவும், நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கும் இல்லை எனவும் அறிவித்தார். அதிர்ச்சியடைந்த முத்துக்குமரன் கண்ணீர் விட, ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் பிக்பாஸ்-இடம் மன்னிப்பு கேட்டனர். இனி இப்படி ஒரு தவறு நடக்காதெனவும் கூறினர். இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்ன நடந்தது என!