Page Loader
பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது யார்?
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருப்பது யார்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2024
03:16 pm

செய்தி முன்னோட்டம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் வார இறுதியில் 'Fatman' ரவீந்தர் எலிமினேட் ஆகிவிட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் யார் நாமினேஷனில் சிக்கியுள்ளனர் என்பதைக் காணலாம். இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. அதோடு கமல்ஹாசன் விலகிய நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் விஜய் சேதுபதிக்கு ஹோஸ்ட்டாக முதல் வாரம். அந்த வார இறுதியில் மக்களில் குறைந்த வோட்டு அடிப்படையில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் தனி அணியாக விளையாடி வருகின்றனர். அதனால் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கவில்லை. அதனை விஜய் சேதுபதியும் விமர்சித்துள்ளார். போட்டியாளர்கள் இந்த வாரம் சிறிது சுவாரசியத்தை கூட்டுவார்களா?

நாமினேஷன்

இந்த வார நாமினேஷன்

இந்த நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்று வருகிறது. புதிய நாமினேஷனில் அதிகமான போட்டியாளர்கள் ஜெஃப்ரியை தேர்வு செய்துள்ளனர். செளந்தர்யா, தர்ஷா குப்தா மற்றும் சாச்சனா ஆகியோர் "கொஞ்சம் இடம் கொடுத்தால் டூமச்சா யூஸ் பண்ணிக்கிறான்" என கூறி ஜெஃப்ரியை நாமினேட் செய்துள்ளனர். அடுத்ததாக, ரஞ்சித். இவர் "அவர் எதையும் ஓப்பனாக பேசமாட்டார்" என்ற காரணத்தினால் நாமினேஷனில் சுனிதா, ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் தர்ஷிகா ஆகியோர் சேர்த்தனர். மறுபுறம் ஆண் போட்டியாளர்கள் ரஞ்சித், அர்னவ் மற்றும் தீபக், செளந்தர்யாவை நாமினேட் செய்துள்ளனர். இறுதியாக, முதிர்ச்சியற்ற பேச்சுக்களை பேசுவதாக கூறி சாச்சனாவை, விஜே விஷால் மற்றும் சத்யா நாமினேட் செய்துள்ளனர்.