பிக்பாஸ் தாமரை செல்வி விவாகரத்து? கணவர் பார்த்தசாரதியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
மேடை நாடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டு, 'பிக்பாஸ் தமிழ் சீசன் 5' நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தாமரைச்செல்வி. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு சீரியல்கள், விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிஸியாக வலம் வந்த இவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தாமரைச்செல்வியின் கணவர் பார்த்தசாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"கருத்து வேறுபாடுகளால் நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டோம். நாங்கள் மனமொத்து பிரிந்துவிட்டோம். இனி எங்களின் பிரைவசி மற்றும் தனிப்பட்ட முடிவுகளை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்பு தாமரைச்செல்வியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து பார்த்தசாரதி நீக்கியுள்ளார்.
குழப்பம்
ரசிகர்கள் மத்தியில் குழப்பம்
பார்த்தசாரதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள போதிலும், தாமரைச்செல்வியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வழக்கம்போல் அப்படியே இடம்பெற்றுள்ளன.
மேலும், இதுகுறித்து தாமரைச்செல்வி தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது அறிவிப்போ வெளியிடப்படவில்லை.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும், சமூக வலைதளங்களிலும் ஜோடியாக வலம் வந்த தங்களுக்குள் திடீரென ஏற்பட்டுள்ள இந்த மனவருத்தம் மற்றும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது பெரும் குழப்பத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.