NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் சீசன் 8: பிசுபிசுத்துப் போன வைல்ட் கார்டு என்ட்ரி, பார்வையாளர்கள் விரக்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் சீசன் 8: பிசுபிசுத்துப் போன வைல்ட் கார்டு என்ட்ரி, பார்வையாளர்கள் விரக்தி
    பிக் பாஸ் சீசன் 8இல் பிசுபிசுத்துப் போன வைல்ட் கார்டு என்ட்ரி

    பிக் பாஸ் சீசன் 8: பிசுபிசுத்துப் போன வைல்ட் கார்டு என்ட்ரி, பார்வையாளர்கள் விரக்தி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 10, 2024
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பார்வையாளர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளைப் பெற்று வருகிறது.

    குறிப்பாக, வைல்ட் கார்டு போட்டியாளர்கள் குறித்து விவாதங்கள் அதிகரித்துள்ளன.

    இதற்கு முந்தைய அனைத்து சீசன்களிலும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தாலும், 7வது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளர் அர்ச்சனா பட்டத்தை வென்றார்.

    இதனால், அதை பின்பற்றி இந்த முறையும் வைல்ட் போட்டியாளர்கள் கடும் போட்டியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    முன்னதாக, இந்த சீசன் தொடங்கியதிலிருந்து, பார்வையாளர்கள் ஆரம்ப போட்டியாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர் மற்றும் வைல்ட் கார்டு உள்ளீடுகள் மூலம் ஆற்றல்மிக்க ஆளுமைகளைக் கோரினர்.

    வைல்ட் கார்டு

    வைல்ட் கார்டு போட்டியாளர்கள்

    இதையடுத்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, கடந்த வாரம் ரானவ், ரயான், சிவகுமார், ரியா, வர்ஷினி மற்றும் மஞ்சரி போன்ற போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தார்.

    இருப்பினும், அவர்களின் செயல்பாடு ஆரம்ப போட்டியாளர்களை விட மோசமாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

    பிக் பாஸை வெளியில் இருந்து விமர்சித்த ஒரு போட்டியாளர் ரியா, வீட்டிற்குள்ளும் அதையே தொடர்கிறார்.

    அதே நேரத்தில் மஞ்சரி பிரபலமான போட்டியாளர் முத்துக்குமாருக்கு சவால் விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

    முத்துக்குமாரின் ஆதரவாளர்கள், அவர் பேசினாலும் அல்லது அமைதியாக இருந்தாலும் சரி, அவரது நிலையான இருப்பு மற்றும் உள்ளடக்க உருவாக்கத்தைக் குறிப்பிட்டு, அவர் போட்டியில் வெல்வார் என்று நம்புகிறார்கள்.

    சௌந்தர்யா

    சௌந்தர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கை

    இதற்கிடையில், மற்றொரு போட்டியாளர் சௌந்தர்யாவின் ரசிகர்கள் அவர் வெற்றிக்கு மிகவும் தகுதியானவர் என்று வாதிடுகின்றனர்.

    போட்டியாளர்களின் ரசிகர் மன்றங்களில் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், இறுதி வெற்றியாளர் யார் என்பதை பிக் பாஸ் மட்டுமே முடிவு செய்வார்.

    எப்படியிருப்பினும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் யாரும் சோபிக்கவில்லை என்பதால், அவர்களில் இருந்து ஒருவர் வெற்றியாளராக நிச்சயம் உருவெடுக்க மாட்டார் என்பது மட்டும் உறுதியாக தெரிவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையே, போட்டி தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதால், இனி வரும் காலங்களில் விறுவிறுப்பை கூட்டும் வகையில் சம்பங்களை பிக் பாஸ் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி
    விஜய் சேதுபதி
    தொலைக்காட்சி சேனல்கள்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் ரியல் ஜோடி அமீர்-பாவனிக்கு நவம்பரில் திருமணமாம்! திருமணம்
    பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது திருமணம்
    பிக் பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு திருமணம்; உமா ரியாஸ் பகிர்ந்த புகைப்படம் திருமணம்
    Bigg Boss Tamil: பிக் பாஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்; என்ன காரணம்? அடுத்து யார்? விஜய் டிவி

    விஜய் டிவி

    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்  நடிகைகள்
    இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ பிக் பாஸ் தமிழ்
    சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்; வைரலாகும் காணொளி  சென்னை
    பிக் பாஸ் புகழ் அக்ஷாரா ரெட்டியின் தாய் உயிரிழப்பு பிக் பாஸ் தமிழ்

    விஜய் சேதுபதி

    விரைவில் தொடங்கும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு? கார்த்தி
    தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள் தமன்னா பாட்டியா
    வைரலாகும் மிர்ச்சி சிவா நடிக்கும் சூது கவ்வும் 2 படத்தின் ஸ்டில்ஸ்  மிர்ச்சி சிவா
    மெரி கிறிஸ்துமஸ்: இந்திய சினிமாவில் ஒரு சோதனை முயற்சி கோலிவுட்

    தொலைக்காட்சி சேனல்கள்

    தொலைக்கட்சியில் வெளியாக இருக்கும் விமலின் 'விலங்கு' வெப் சீரீஸ் வெப் சீரிஸ்
    வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு வைரல் செய்தி
    நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி நடிகைகள்
    பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025