LOADING...
காதலர் தினத்தன்று தன்னுடைய காதலியை அறிமுகம் செய்த பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா
இன்று காதலர் தினத்தன்று, தன்னுடைய காதலியை உலகிற்கு அறிமுகம் செய்தார், அபிஷேக்

காதலர் தினத்தன்று தன்னுடைய காதலியை அறிமுகம் செய்த பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2024
04:50 pm

செய்தி முன்னோட்டம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 மூலம் பிரபலமானவர் அபிஷேக் ராஜா. இவர் அந்த நிகழ்ச்சியில், தான் விவகாரத்தானவர் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காதலர் தினத்தன்று, தன்னுடைய காதலியை உலகிற்கு அறிமுகம் செய்தார். ஸ்வாதி நாகராஜன் என பெயர் கொண்ட தன்னுடைய காதலியை டேக் செய்து அபிஷேக் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு, "அதில் குறைகள் உள்ள என்னை ஒரு பார்ட்னராக மாற்றியதற்கும் என்னை விட்டுக்கொடுக்காததற்கும் நன்றி. இனிய காதலர் தின வாழ்த்துக்கள் சுவாதி" என கேப்ஷன் இட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது யூட்யூபில் சினிமா விமர்சகராக இருக்கிறார் அபிஷேக் ராஜா. அதுமட்டுமின்றி VJ வாகவும் பணியாற்றி வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

காதலியை அறிமுகம் செய்த  'சினிமா பையன்' அபிஷேக்