Page Loader
2வது குழந்தைக்கு தந்தையான 'பிக் பாஸ்' பிரபலம் ஆரவ் 
2வது குழந்தைக்கு தந்தையானார் 'பிக் பாஸ்' பிரபலம் ஆரவ்

2வது குழந்தைக்கு தந்தையான 'பிக் பாஸ்' பிரபலம் ஆரவ் 

எழுதியவர் Nivetha P
Oct 09, 2023
04:50 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2017ம் ஆண்டு நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பிக் பாஸ்' முதல் சீசனில் பங்கேற்று வெற்றிபெற்றவ ஆரவ், அந்த வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். 'ஓ காதல் கண்மணி', 'சைத்தான்' போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். பின்னர் இயக்குனர் சரண் இயக்கத்தில் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.' என்னும் படம் மூலம் நாயகனாக மாறிய ஆரவ், 'ராஜபீமா' என்னும் மற்றொரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளாராம். அப்படம் இன்னும் வெளியாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் ஆரவ்'க்கும் 'ஜோஷ்வா' என்னும் படத்தில் நாயகியாக நடித்த ராஹி என்பவருக்கும் 2020ல் திருமணம் நடைபெற்றது. அதன்படி, 2021ல் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பதிவு 

அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி-ஆரவ்

அதனை தொடர்ந்து தற்போது அவருக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை அவர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில் அவர் தங்களுக்கு இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த பதிவில், "இந்த உலகிற்கு எங்கள் விலைமதிப்பில்லா குட்டி இளவரசியை அறிமுகப்படுத்தும் பொழுது எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியில் வெடிக்கிறது. எங்கள் வாழ்க்கையினை அவள் முன்னதாகவே முடிவற்ற அரவணைப்பு மற்றும் சிரிப்பால் நிரப்பியுள்ளதால் எங்கள் குடும்பம் முழுமை அடைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், தங்களது இந்த ஒவ்வொரு தருணத்தினையும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, "உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மிக்க நன்றி' என்றும் கூறியுள்ளார்.