பிக் பாஸ் 18: பிக் பாஸிற்கு தமிழ் கற்றுத்தந்த ஸ்ருத்திகா அர்ஜுன்; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ள ஸ்ருத்திகா, வரலாற்றில் முதல்முறையாக அந்த பிக் பாஸ்ஸிற்கு தமிழ் கற்று தந்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதில் ஸ்ருத்திகா அர்ஜுன் கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸுடன் ஒரு ஜாலி அரட்டையில் ஈடுபடுகிறார். அப்போது ஸ்ருத்திகாவிடம் பிக் பாஸ் அவரது கணவர் அர்ஜுன் பாங்காக் செல்ல விரும்புகிறார் என்று கூறி கிண்டல் செய்தார்.
அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ஸ்ருத்திகாவிடம், உங்கள் கணவருக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா என்று பிக்பாஸ் விடாமல் கிண்டல் அடிக்கிறார்.
அதன் பின்னர், ஸ்ருத்திகா பிக் பாஸுக்கு சில தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொடுக்கிறார். அதை பிக் பாஸும் கஷ்டப்பட்டு பேசும் வீடியோ ரசிகர்களிடையே பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This is for the first time in the history of biggboss that we r hearing Biggboss talking like this with any contestant 🥹🫶🫶...#ShrutikaArjun is asking BB to warn @arjunraaj in tamil 🤭🤭.#Biggboss18 #BiggBossSeason8Tamil #ShrutikaRajArjun #BB18 pic.twitter.com/PTxSUDCEAX
— Sameera ( Shrutika Fan ) (@yourfav_tiya) October 21, 2024