பிக் பாஸ் தமிழ் 10: முதல் நாளே வெளியேற்றப்பட்டாரா பிரசாந்த்? நடந்த பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் மிக விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. வழக்கமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே பிக் பாஸ் வீட்டின் படப்பிடிப்பு தொடங்கிவிடும். அந்த வகையில், நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே போட்டியாளராகக் களம் கண்ட பிரபல திரைப்பட விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரசிகர்கள் வாக்கெடுப்பு
ரசிகர்களின் ஆன்லைன் வாக்கெடுப்பும் வெளியேற்றமும்
போட்டித் தொடக்கத்தின் போது ப்ரித்விநாத், ஜாவித் மற்றும் பிரசாந்த் ஆகிய மூன்று போட்டியாளர்களில் இருவர் மட்டுமே வீட்டிற்குள் செல்ல முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
இதற்காக இணையதளம் மூலமாக நடத்தப்பட்ட ரசிகர்கள் வாக்கெடுப்பில், பிரசாந்தைக் காட்டிலும் ப்ரித்விநாத் மற்றும் ஜாவித் ஆகியோர் அதிக வாக்குகளைப் பெற்றனர்.
இதன் காரணமாகக் குறைந்த வாக்குகள் பெற்ற பிரசாந்த் பிக் பாஸ் வீட்டின் பிரதான நுழைவாயிலில் இருந்தே முதல் நாளிலேயே வெளியேறும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வைல்டு கார்டு
மீண்டும் வைல்டு கார்டு முறையில் உள்ளே செல்ல வாய்ப்பா?
கடந்த சீசன்களில் நடிகை சச்சனா முதல் நாளிலேயே வெளியேற்றப்பட்டு, பின்னர் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் வீட்டிற்குள் அனுப்பப்பட்ட சம்பவம் நடந்தது.
அதே போன்ற ஒரு அதிரடித் திருப்பமாக, பிரசாந்தும் ஓரிரு நாட்களிலோ அல்லது சீக்ரெட் ரூம் வழியாக ஒரு வார காலத்திற்கு பிறகோ மீண்டும் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தொலைக்காட்சியில் தொடங்குவதற்கு முன்பே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
3 Contestants were given 2 Mins to talk about a Topic. Then Audience there will vote and pick 1 among then.🫢
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 5, 2026
Models Prithvinath and Javith enters.
ItIs Prashanth loses the 3-way stage battle and is evicted.🤦♂️#BBTamil10 pic.twitter.com/5RIzvhGZTS
தொகுப்பாளர்
விஜய் சேதுபதியின் தொகுப்பாளர் பயணம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
முந்தைய சீசன்களைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தொடர்ந்து விஜய் சேதுபதி இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு, ரசிகர்களைக் கவரும் வகையில் புதிய வியூகங்களுடன் பிக் பாஸ் குழுவினர் இந்த சீசனைத் திட்டமிட்டுள்ளனர்.
தேவையில்லாத வன்மத்தை வளர்ப்பதாக விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த பத்தாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.